பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களே டெல்லி தேர்தல் தோல்விக்கு காரணம்

0 505

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லியில் தங்கள் கட்சிக்கு தோல்விக்கு முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க அறிக்கைகளும், வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களுமே தங்கள் கட்சியின் தோல்விக்குக் காரணங்களாக அமைந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

முன்னதாக அந்தக் கட்சியின் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா மற்றும் கபில்மிஸ்ரா ஆகியோர் தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. டெல்லி தேர்தலை பாஜக தலைவர்கள் இந்தியா, பாகிஸ்தானுடனும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை பாலியல் குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments