தங்கம் விலை உயர்வு..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் தங்கம் விலை, அவ்வப்போது குறைவதும் பின்னர் உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 3 ஆயிரத்து 862 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 27 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 889 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 30 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 216 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments