சர்தார் படேலை அமைச்சரவையில் சேர்க்க நேரு விரும்பவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் புதிய தகவல்

0 769

மறைந்த பிரதமர் நேரு தனது முதல் மத்திய அமைச்சரவையில் வல்லபபாய் படேலை சேர்க்க விரும்பவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சரான படேல், சிதறிகிடந்த சிற்றரசுகளை இணைத்ததால் இரும்பு மனிதராக அறியப்படுகிறார். அவருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி வி.பி. மேனனின் வாழ்க்கை வரலாறை நாராயணி பாசு புத்தகமாக எழுதியுள்ளார். அதில் வி.பி. மேனன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, ட்விட்டரில் ஜெய்சங்கர் பதிவு வெளியிட்டுள்ளார்.

நேரு, படேல் இடையே கருத்து வேறுபாடு நிலவியது எனவும், நேரு தனது முதல் மத்திய அமைச்சரவையில் படேலை சேர்க்க விரும்பவில்லை எனவும், படேல் மறைவுக்கு பின் அவரின் நினைவுகளை அழிக்க திட்டமிட்டு பிரச்சாரம் நடந்ததை நேரில் கண்டதாக வி.பி. மேனன் கூறியதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments