மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய சம்பவத்தில் 10 இளைஞர்கள் கைது

0 641

டெல்லியில் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் ஊடுருவி ஏராளமான மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய சம்பவத்தில் சமூக விரோதிகள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி கல்லூரியில் புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments