தொலைக்காட்சி தொகுப்பாளர் கழுத்தை நெரித்துக் கொலை

0 736

பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவர் கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர். 29 வயதான அனிதா இன்னொருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவர் கணவர் ரவீந்தர் பால் சிங் சந்தேகித்தார்.

இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மனைவியை நைனிடாலில் உள்ள குல்தீப் என்ற நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர்  நண்பனின் உதவியுடன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் இருவரும் நள்ளிரவில் அனிதாவின் உடலை காட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments