செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு தூக்கு

0 950

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 2 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், செவிலியர் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்தார். கணவர் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதாலும், மகன், கோயம்புத்தூரில் படித்து வந்ததாலும், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல், 2008ஆம் ஆண்டு, செவிலியர் வாயில் துணியை திணித்து, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அப்போதையே மதிப்பில், சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டி.என்.ஏ சோதனை மூலம், கல்லிடைக்குறிச்சி ராஜேஷ், அயன்சிங்கம்பட்டி வசந்தகுமார் ஆகிய 2 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, 2 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததோடு, மற்ற நால்வரையும் விடுவித்துத் தீர்ப்பளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments