TNPSC முறைகேட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்

0 459

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமா என சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதனைத் தெரிவித்தார்.ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின்னர் கூட்டணி குறித்து பேசுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ராமதாஸ் கருத்து கூறிய பின்னர் அது தொடர்பான கருத்தை அ.தி.மு.க.வும் தெரிவிக்கும் என்றார். 2021-ல் தே.மு.தி.க. ஆட்சியைப் பிடிக்கும் என்ற பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சி தொடங்கியவர்களுக்கு ஆட்சியைப் பிடிப்பது தான் கனவு என்று கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments