வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 711

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 100 இந்தியர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், டைமண்ட் ஷிப் எனப்படும் கப்பலில் உள்ள 3,500 பயணிகளில், சுமார் 60 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அக்கப்பலில் இருந்து வெளியேற யாருக்கும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

இதனிடையே, கப்பலில் சிக்கியுள்ள மதுரை மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய தகவலில், 6 தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள் கப்பலில் இருப்பதாக தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments