ப. சிதம்பரத்திற்கு கட்சிக்குள் இருந்தே கண்டனம்

0 1225

பாஜகவை தோற்கடிக்கும் பணியை, மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளதா என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி,கேள்வி எழுப்பியுள்ளார். 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ,பாஜக வை தோற்கடித்ததற்காக பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

image

இதற்கு ஷர்மிஸ்தா முகர்ஜி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். காங்கிரசின் மோசமான தோல்விக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு பாராட்டு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

மாநில கட்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றால் மாநில காங்கிரஸ் கமிட்டிக்களை கலைத்துவிடலாமா என்றும் ஷர்மிஸ்தா, ப.சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments