பாஜகவுடன் இணைகிறது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

0 1151

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை பாஜகவுடன் இணைக்க முடிவுசெய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தின் முன்னணி கட்சிகளுள் ஒன்றாக விளங்கிவருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 3 இடங்களில் வென்றது.

இந்நிலையில், கட்சியை பாஜவுடன் இணைக்க முடிவுசெய்துள்ள அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பாபுலால் மராண்டி, வருகிற 17ஆம் தேதி பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments