​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவு

பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவு

கவுதம் அதானி குறித்த சுப்ரமணியன் சுவாமியின் கருத்தை தொடர்ந்து, அதானி குழும பங்குகளின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது. பொதுத்துறை வங்கிகளில் அதிகமாக வாராக் கடன் வைத்திருப்பது கவுதம் அதானி தான் என்றும், அதை மீட்க பொதுநல வழக்கு தொடரப் போவதாகவும்...

தந்தை பெரியாருக்காக களமிறங்கியிருப்பவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தந்தை பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டக் களமிறங்கியிருப்பவர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பலநூறு ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு உண்மையான சமூக விடுதலையைப் பெற்றுத்தந்த தந்தை பெரியாரின் பெயரைக் கேட்டால், இன்றும் இனப் பகைவர்களுக்கு அடிவயிறு...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கெடு முடிவதை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக கமல்ஹாசன் சந்தேகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு கடந்து கொண்டிருப்பதை திசை திருப்புவதற்காகவே, பெரியார் சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழர்கள் இருப்பதால் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை...

ரஜினி, கமல் வராவிட்டால் தமிழகம் வெற்றிடமாகவே இருந்துவிடுமா? : திருநாவுக்கரசர்

ரஜினியும், கமலும் கட்சி தொடங்கவில்லை என்றால் தமிழகம் தலைவர்கள் இல்லாத வெற்றிடமாகவே இருந்துவிடுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதலமைச்சராகும் ஆசை தனக்கும் இருப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளிடம் முதலமைச்சர் பதவி கோரப்படுமா என்ற கேள்விக்கு...

சதீஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும் - குடும்பத்தினர் கோரிக்கை

சென்னையில் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி அருகே உள்ள கொத்துக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், கடந்த 2011ஆம் ஆண்டு...

மகளை கிண்டல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த தந்தை வெட்டிக் கொலை

கன்னியாகுமரி அருகே மகளை கிண்டல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கப்பியறை செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது முதல் மகளை அதே பகுதியைச் சேர்ந்த அருள்...

லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக கொல்கத்தாவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதம்

திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக கொல்கத்தாவில் பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை  சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு அருகே பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின்...

குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஒசூர் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையத் துவங்கி உள்ளன. அங்குள்ள போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 9 காட்டுயானைகள்...

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக அவரது மனைவி பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். முகமது சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் - ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென ஹெச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர்

சென்னையில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் பெரியார் சிலை அருகே ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது தமிழ் அமைப்பினர், அரசியல் கட்சியினர் இணைந்து போராட்டம் ஆர்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென ஹெச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் களைந்து செல்ல போலீசார் கோரிக்கை சேலம் சேலத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக...