​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

நாடாளுமன்றத்தில், மாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண்சிங்...

ONGC குழாயில் உடைப்பு - எண்ணெய், மற்றும் வாயு கசிவால் பதற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரை அடுத்த தெற்கு காட்டூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய், மற்றும் வாயு கசிந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் லேசாகத் தொடங்கிய கசிவு அதிகரித்து புகையுடன் எண்ணெய் பீறிட்டு வெளியேறியது. ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ...

பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் ரபேல் ஒப்பந்தம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்தம், பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 57 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் முறைகேடு...

வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் பாய்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் பாய்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தருமபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் அடைமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்...

கன்வாரியா புனித யாத்திரையில் பக்தர்களின் வன்முறைகளை வன்முறையை ஒடுக்க கடும் நடவடிக்கை தேவை - உச்சநீதிமன்றம்

வடமாநிலங்களில் கன்வாரியா புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிராவண மாதத்தை முன்னிட்டு மக்கள் கன்வாரியா யாத்திரை என்ற பெயரில் புனித...

அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவதாகக் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அக்கல்லூரி மாணவர்கள் புகாரளித்தனர். ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி என்ற அந்தக் கல்லூரியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ,...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு கூடுதல் அவகாசம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அக்டோபர் 8-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முந்தைய விசாரணையின் போது...

மெட்ரோ ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவைகள்

சென்னையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக, மிக குறைந்த கட்டணத்தில், வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவைகளை, சனிக்கிழமை முதல், மெட்ரோ ரயில் நிர்வாகம்  அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சோதனை அடிப்படையில், 6 மாதங்களுக்கு  வாடகை கார், மற்றும் ஷேர்...

அமெரிக்க முயற்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் முட்டுக் கட்டை போட முயற்சி

வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐ.நா.விடம் கோரும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் முட்டுக் கட்டை போட முற்பட்டு வருகிறது. அமெரிக்கா-வடகொரியாவுடனான உறவு சுமுகமாகும் முன், அமெரிக்கா ஐ.நா. மூலம் அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்த காலகட்டத்தில்,...

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பானவை தானா? நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் விமானிகள் கேள்வி

ஏர் இந்தியா விமானங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான நிலையில்தான் உள்ளனவா என அதில் பணிபுரியும் விமானிகளே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அகில இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஊழியர்களுக்கான ஜூலை மாத...