​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்  கரும்புகை சூழ்ந்ததும் தீயணைப்பு படை வீரர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ...

குரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்

குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 11ஆம் தேதி குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற...

அப்பலோ மருத்துவர் பத்மா ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் பத்மாவும், செவிலியர் மகேஸ்வரியும் நேரில் ஆஜராகியுள்ளனர். நேற்று மருத்துவர் ஷில்பா மற்றும் செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.  அப்போது அவர்கள் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வென்டிலேட்டர் கருவி...

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது, விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவியரை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் ஜூலை...

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தைகளை வீசி கொன்ற தாய்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற தாய் தானும் தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஊராட்சி முன்னாள் தலைவரான செந்திலுக்கும் அவரது மனைவி சிவரஞ்சனிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்துவந்ததாகவும், இதன் காரணமாக அதிகாலை 3...

ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இரட்டை திருமாளிகையில் உள்ள சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஏகாம்பரநாதசுவாமி கோயிலில்...

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ...

300 அடி உயர ராட்சத கிரேனில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

டெல்லியில் 300 அடி உயர ராட்சத கிரேனில் ஏறி தற்கொலை விடுத்த நபரை, காவல்துறையினர் பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். பஹர்கஞ்ச் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் இருந்த 300 அடி உயர ராட்சத கிரேனில் ஏறிய நபர் ஒருவர்,...

உடுமலை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்ச லிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை அடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி மலை பஞ்ச லிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை...

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 15,000 டன் ரசாயனம் வெளியேற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 15 ஆயிரம் டன்னுக்கு மேல் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இந்நிலையில், கடந்த மாதம் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கந்தக...