​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜார்க்கண்டில் 2 சிறுமிகளை அடுத்தடுத்து கொடூரமாக பலாத்காரம் செய்த 11 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 சிறுமிகளை அடுத்தடுத்து கொடூரமாக பலாத்காரம் செய்த 11 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 சிறுமிகளை அடுத்தடுத்து கொடூரமாக பலாத்காரம் செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 16-ம் தேதி லோஹர்டகா பகுதியில் பக்கத்து வீட்டுக்காரருடன் பைக்கில் சென்ற சிறுமிகள் இருவர் பைக் பழுதாகிவிட்டதால் உதவிக்கு வருமாறு தமது நண்பனை அழைத்துள்ளனர். ஆனால்,...

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம் அடைந்தார். அந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் சகோதரியாக நடித்தவர் சுஜாதா குமார் தனுஷ் நடித்த ராஞ்சனா உள்ளிட்ட படங்களிலும் நடித்த சுஜாதா குமார் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று...

பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காகப் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உலக நாடுகளைப் போப் ஆண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற போப் பிரான்சிஸ், இடைவிடாத அடைமழையாலும் வெள்ளத்தாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கானோர் முகாம்களுக்கு...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடமான டெல்லி வீரபூமியில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்...

பவானி ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டம்...

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு அதிக நீர்வரத்து காரணமாக 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பகுடுதுறை, தொட்டம்பாளையம், கெஞ்சனூர், ஆலத்துக்கோம்பை, அரசூர் உள்ளிட்ட...

சுங்கச்சாவடி அருகே தனியார் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நடந்த போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் போது, ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்து...

பல்லடம் அருகே 5 தலைமுறையினர் ஒன்றுகூடிய விழா

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தலைமுறையினர் ஒன்று கூடி வம்சாவழி சந்திப்பு விழா கொண்டாடினர். பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் வம்சாவழியினர் 5 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னோர்களின் கலாச்சாரம்,...

அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு படம் பிடிக்கப்பட்டது

பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா என்ற இடத்தில் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட மரத்தில் சிறு சிறு...

பாகிஸ்தானில் மூச்சுமுட்ட வைக்கும் கடன் சுமை -இம்ரான் கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான், கடந்தகால ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகளில் நாட்டிற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன்சுமையை விட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பதவியேற்புக்குப் பின்னர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய அவர், பாகிஸ்தான்...

உத்தரப்பிரதேசத்தில் முதலையைத் தடவிக் கொடுத்த இளைஞரின் கையை கடித்துக் குதறியது

உத்தரப்பிரதேசத்தில் முதலையைத் தடவிக் கொடுத்த இளைஞரின் கையை முதலை கடித்துக் குதறியது. லட்சுமிபூர் கேரி மாவட்டத்தில் குளம் ஒன்றில் சில இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதர்களுக்கு மத்தியில் முதலை ஒன்று படுத்துக் கிடந்தது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் முதலையின்...