​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழகம் முதலிடம் - மாஃபா பாண்டியராஜன்

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழகம் முதலிடம் - மாஃபா பாண்டியராஜன்

நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நேரிடும் இடம் தமிழ்நாடு என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நபார்டு வங்கியின் சார்பில் நடைபெற்ற பருவநிலை மாற்றமும் வேளாண்மையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்....

சென்னையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 17 பேருக்கும் நீதிமன்ற காவல்

சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வரும் 31ந் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும்...

கர்நாடகாவில் கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், மாணவர்கள் அவதி

கர்நாடகாவில் கனமழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சிக்மகளூர் அருகே மாணவர்கள் ஆபத்தான முறையில் மரப்பாலத்தை கடந்தும், படகுகள் மூலமாகவும் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அங்குள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...

சாலைப் பள்ளங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்காத பாஜக அரசை கண்டித்து, நவநிர்மாண் சேனா போராட்டம்

மும்பையில் சாலைப் பள்ளங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்காத பாஜக அரசை கண்டித்து, தலைமைச் செயலகம் எதிரே நவநிர்மாண் சேனா அமைப்பினர் நடைபாதையை சேதப்படுத்தினர். மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டிவருவதால், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, நீர் தேங்கியுள்ளது. இந்த பள்ளங்களில் தண்ணீர்...

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுத்துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள்...

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அவதி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல குன்றுகளின் மீது கயிற்று ஏணிகளை பயன்படுத்தி ஏறிச் செல்கின்றனர். சமோலி((Chamoli)) நகரில் குன்றுப் பகுதிகளை இணைக்கும் வகையில் போடப்பட்டிருந்த ஆற்றுப் பாலம் கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து பள்ளத்தாக்கில்...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, 17 பேர் கைது...!

சென்னையில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர் சென்னை அயனாவரத்தில் சுமார் 300 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் டெல்லியை பூர்வீகமாக கொண்ட...

லிபியாவில் கண்டெய்னருக்குள் அடைக்கப்பட்ட 8 அகதிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

லிபியாவில் கண்டெய்னருக்குள் அடைக்கப்பட்ட 8 அகதிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியான ஸூவாரா ((Zuwarah)) என்ற இடத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக கப்பலில் பொருட்கள் கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்து சப்தம் வந்ததால் பெட்ரோல் நிலைய உரிமையாளர் பாதுகாப்புப்...

அரசியலுக்கு வரும் நடிகர்கள் அன்புமணியுடன் விவாதம் நடத்த தயாரா? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்கள், அன்புமணியுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளனரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அடையாறில் நடைபெற்ற பா.ம.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்....

கைலாசநாதர் கோயில் பின்புறம் ஒன்றரை அடி உயர சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள கங்கையம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயர சிலை திடீரென வைக்கப்பட்டிருந்தது. கோயிலில் சுவாமி சிலையை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சிவ காஞ்சிபுரம் போலீஸார் வந்து சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பன்னீர்...