​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இறுதிப் போட்டியை சமன் செய்ததுடன், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று...

கிரிக்கெட் சூதாட்டத்தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த உத்தரவு

கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2000ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதில் சூதாட்டத்தரகராகச் செயல்பட்டதாக டெல்லியைச்...

அனுஷ்கா சர்மாவுடன் வெற்றி நடை போட்ட விராட் கோலி

சிட்னி மைதானத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன், விராட் கோலி வெற்றிநடை போட்ட வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று, இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றதைக் காட்டிலும் தனக்கு இதுதான் மிகப்பெரிய...

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை..! தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்றும் சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் மூன்றாம் தேதி...

ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 24 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஏ-பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி நேற்று...

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோஆன் ஆனது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னும் 316 ரன்கள் அடித்து, இலக்கையும் நிர்ணயிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.  சிட்னியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்...

புரோ கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு...

புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, பெங்களூரு புல்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய புரோ கபடி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன.இதன் இறுதிச் சுற்றுக்கு பெங்களூரு புல்ஸ்,...

நேர்மையாக நடந்துகொண்ட இந்திய வீரரை அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்

சிட்னி டெஸ்ட் போட்டியின்போது நேர்மையாக நடந்து கொண்ட இந்திய வீரர் கே.எல்.ராகுலை அம்பயர் உள்பட அனைவரும் கைதட்டி பாராட்டினர். ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தபோது ஜடேஜா பந்து வீசினார். அப்போது உயரத்தில் பறந்த பந்தை கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்தார். அனைவரும்...

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் தேர்வு கேலிக்கூத்தானது - வார்னே

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய முன்னணி வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட், ஆர்கி டி'ஷார்ட் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்டததை சுட்டிக் காட்டி...

ஆஸ்திரேலிய தொடரில் அசத்தும் செட்டீஸ்வர் புஜாராவின் ஆண்டு ஊதியத்தை உயர்த்த பி.சி.சி.ஐ முடிவு

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் இந்திய வீரர் செட்டீஸ்வர் புஜராவுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. தற்போது ஏ பிரிவு வீரர்கள் பட்டியலில் புஜாரா இடம் பிடித்துளளார். இதன் மூலம் அவருக்கு பி.சி.சி.ஐ ஆண்டு ஊதியமாக ஐந்து கோடி...