​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்றும், நாளையும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

இன்றும், நாளையும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வாரத்தில்...

நீட் தேர்வுக்காக மகனுடன் எர்ணாகுளம் சென்று உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊருக்கு வருகை

மகனின் நீட் தேர்வுக்காக சென்றபோது எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட்...

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவுமண்டபத்திற்கு இன்று அடிக்கல்

சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இன்று காலை 9 மணியளவில் நடைபெறும்...

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9...

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளி, சேலம் மெய்யனூர் வித்யாமந்திர் பள்ளியில் நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள்

மருத்துவப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தமிழ்வாயிலாக தேர்வெழுதுவோருக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் தாமதமாக தேர்வு நடத்தப்பட்டது.  மருத்துவம் மற்று பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு...

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள்

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள்...

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி

எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வுக்காக எர்ணாகுளம்...

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவடைந்தது - தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இயற்பியல் கேள்வி சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 170 இடங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு...

ஜம்மு காஷ்மீரில் சோபியானில் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சோபியான் மாவட்டம் படிகம் (badigam) என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,...

நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ சீட் பெறும் அளவுக்கு...