​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. பின்னர் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் ஏற்பட்ட சட்டம்...

கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க கோரி உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் மீண்டும் மேல் முறையீடு...

சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17 பேர் உயிரிழப்பு...

சீனாவில் பரவி வரும் கரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. சீனாவின் உஹான் (Wuhan ) பகுதியில் கரோனா எனும் புதிய வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வைரசால்...

கொரோனா வைரஸ்.. சென்னையில் தடுப்பு நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல்  தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.  சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும்...

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மரணம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். அங்குள்ள  அவந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பு...

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனை இருதரப்பு விவகாரம், அதில் மூன்றாவது நாட்டுக்கு இடமில்லை என்று இந்தியா திரும்ப திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சனை பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சேர்ந்து விவாதித்ததாக அமெரிக்க அதிபர் கூறிஉள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸில்...

விண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்

நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக மனித வடிவ ரோபோவை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய...

நித்திக்கு எதிராக "புளூ கார்னர்" நோட்டீஸ்..!

குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக, சர்வதேச போலீசான இண்டர்போல், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.  சிறுவர், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய குஜராத் போலீசார், அண்மையில், நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்கள்,...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா - தலைமைச்செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தேவாரம், திருவாசகம் ஓதி நடத்தக் கோரிய வழக்கில் தலைமைச்செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன்...