​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வால்பாறையில் ஒருவார காலமாக கனமழை..! சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் ஒருவார காலமாக கனமழை..! சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒருவாரமாக மழை பெய்துவரும் நிலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் மின் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்ததால்...

ஜூன் 15 முதல் பின்னலாடை பொருட்களின் விலை 10 சதவிதம் உயர்கிறது

மூலப்பொருட்களின் விலை உயர்வால், வரும் 15ஆம் தேதி முதல் பின்னலாடைகளின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் பல கோடி ரூபாய்க்கு...

சேலத்தில் அரசு பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.6.5லட்சம் மோசடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பணி பெற்றுத் தருவதாகக் கூறி ஆறரை லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் அரசு பணி பெற்றுத் தருவதாகக் கூறிய ஆத்தூர் தெற்கு...

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு வகை வண்டு தாக்குதல்..! பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு வகை வண்டு தாக்குதலால் பக்தர்கள் அலறியடித்து ஓடியதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. 2-வது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தில் கதண்டு கூடு உள்ளது. கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கட்டுமானக் கம்பி குத்தியதில் கதண்டு கூடு...

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டுவதாக புகார் : 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சேலத்தில் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை போராட்டத்திற்கு தூண்டி வந்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் - சென்னை இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாகப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

சேலம் குமரகிரி ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம்

சேலம் குமரகிரி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், சாயப்பட்டறைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் குமரகிரியில் உள்ள ஏரி 30ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் வேளாண் நிலங்கள் பாசனம் பெறுவதுடன்...

கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசமாகின. கச்சேரி சலையில் உள்ள கோபுரம் வணிக வளாகத்தில் செயல்படும் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் மின்கசிவு காரணமாக அதிகாலை தீ...

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய காலத்தில்...

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர் கண்ணன், கயத்தார் துணை வட்டாட்சியராகவும், மற்றொரு தனித்துணை வட்டாட்சியரான சேகர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகவும் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில்,...

உதகையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

உதகையில் இருந்து பெங்களூர் சென்ற அரசுப் பேருந்து, மலைப் பாதையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிர்தப்பினர். தமிழக அரசுப் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் வளைவில் திரும்பிய போது, சாலையின்...