​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏரி நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது

ஏரி நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவையடுத்து, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் ஏரியின் நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஏற்காடு...

ஏற்காட்டில் உருவான “திடீர் அருவிகள்”..!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. ஏற்காட்டில் கடந்த இரண்டு வார காலமாகவே மழை பெய்துவருகிறது. இதையடுத்து மலைப்பாதையில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு சிறு திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. சிலவற்றில் குறைவாக...

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியையிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். சாலை மரக்குளம் என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் உடற்கல்வி உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர் இன்று காலை காரியப்பட்டி...

அப்பளக்கடையில் பொருட்களை திருடிவிட்டு நாமம்போட்டுச் சென்ற திருடர்கள்

மதுரை அண்ணாநகர் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் நகை, பணம், பொருட்கள் திருடுபோனது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாசில்தார் நகரில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் தராசு, கணினி, சீலிங் மிஷின் என சுமார் 1.8 லட்சம் மதிப்பிலான...

திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி சடலமாக மீட்பு

திருச்சியில், திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய எம்எஸ் மருத்துவ மாணவி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்த கயல்விழி திருச்சி கே.ஏ.பி. விஷ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில், எம்.எஸ் படித்து...

ஏரிக்கரையில் 3,000 பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகில் உள்ள ஏரிக்கரையில் சுமார் 3 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட பறையபட்டி புதூர் ஏரியில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து...

நீதிபதி வீட்டுத் தோட்டத்தில் இருந்த சந்தன மரம் கடத்தல்

கோவையில் நீதிபதி வீட்டுக் காவலாளியை கட்டி வைத்து கத்தி முனையில் தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பொன்னுரங்கன் வீதியில் அரசு குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு நீதிபதி நந்தினி தேவி...

இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை, கடந்த 22ம் தேதி 4 பேர் கொண்ட...

பள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளையை தடுக்க பொதுமக்களே களத்தில் இறங்கியுள்ளனர். மணல் அள்ள வாகனங்கள் செல்ல முடியாத படி பள்ளம் தோண்டி அதிரடியில் ஈடுபட்டுள்ளனர். வெம்பாக்கம் தாலுக்காவில உள்ள கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு மற்றும்...

3 அம்ச கோரிக்கைகளுடன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பது, கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத...