​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடரும் மழையால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி

தொடரும் மழையால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் நெல் மகசூல் அதிக அளவு கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே சீரான இடைவெளியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியை சுற்றியுள்ள...

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ. 1.27 லட்சம் கொள்ளை

அரியலூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வி என்பவர் எஸ்.பி.ஐ. வங்கியில் நகைகளை அடகு வைத்து எல்.ஐ.சி.யில் கட்டச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவரைப் பின்தொடர்ந்த மர்ம...

தனியார் கல்லூரியில் ஒத்திகையின்போது மாணவி பலியான விவகாரம் - போலி பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை தனியார் கல்லூரியில் பாதுகாப்பு ஒத்திகையின்போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை, 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி நரசிபுரம் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர்...

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற திருடனைப் பிடித்து தரும அடி கொடுத்த மக்கள்

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவனை பொதுமக்கள் பிடித்து, அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள், உள்ளே நுழைந்தனர். இதனை அறிந்து ஆட்கள் வந்து விட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி...

காற்றில் பறந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அரசுப் பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீலகிரியில் உள்ள தெங்குமரஹாடாவுக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.கீழ்பவானி பாலம் அருகே பேருந்து சென்ற போது, மேற்கூரை திடீரென பெயர்ந்து காற்றில் பறந்தது.  இதனால் பேருந்தில்...

ஸ்டெர்லைட் இனி திறக்கப்பட வாய்ப்பே இல்லை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களை வெளியேற்றும் பணி 45 விழுக்காடு முடிந்துள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகே காயல்பட்டிணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சந்தீப்...

நாற்றாம்பள்ளி அருகே கோவிலில் ஐம்பொன்சிலை, வெண்கலச் சிலை, தங்க நகை, பணம் கொள்ளை

வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி அருகே பொன்னியம்மன் கோவிலில் ஐம்பொன்சிலை, தங்க நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். கோமுட்டியூரில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4 கிலோ எடையுள்ள பொன்னியம்மன் ஐம்பொன் சிலை,...

கோவையில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவையில் அரசு பாலிடெக்னிக் மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி பொறியியல் பாடப்பிரிவு பயின்று வந்த சஞ்சய் என்ற மாணவன் சக மாணவனிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட பேராசிரியர் முருகன் என்பவர், மாணவர்கள் தம்மைப்...

கைலாசநாதர் கோயில் பின்புறம் ஒன்றரை அடி உயர சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள கங்கையம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயர சிலை திடீரென வைக்கப்பட்டிருந்தது. கோயிலில் சுவாமி சிலையை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சிவ காஞ்சிபுரம் போலீஸார் வந்து சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பன்னீர்...

துப்புரவு தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனப் புகார்

ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்கள், கடந்த 2 மாதமாக நகராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரியம் 100 துப்புரவுத் தொழிலார்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது....