​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் பல்வேறு குழப்பங்கள் :ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் பல்வேறு குழப்பங்கள் :ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

அப்பல்லோ மருத்துவமனை வழங்கி இருக்கக் கூடிய ஆவணங்களில் பல்வேறு விதமான குழப்பங்கள் இருந்ததை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி  ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ ஆவண காப்பக மேலாளர் கோவிந்த ராஜன்,  அப்பல்லோ...

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னையில் 11வயதுச் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி சிறுமியின் எதிர்காலத்தைச் சூறையாடிய...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் இறுதிவாதத்தை முன்வைக்க கால அவகாசம் வேண்டும்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டில், இறுதி வாதங்களை முன்வைக்க குற்றம்சாட்டப் பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், சன் டிவிக்கு சட்டவிரோதமாக அதிவிரைவு...

எஸ்பிகே குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இரண்டுநாள் சோதனை நிறைவு

எஸ்பிகே குழுமத்தோடு தொடர்புடைய இடங்களில் இரு நாட்களாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மொத்தம் கணக்கில் காட்டப்படாத 170கோடி ரூபாய் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எஸ்பிகே குழும உரிமையாளர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பிரிவு 2ம் கட்ட கலந்தாய்வு நிறைவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், தகுதிபெற்றவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சிறப்புப் பிரிவினருக்கு ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு...

திருச்சி பைனான்ஸ் அதிபரை கடத்திச் சென்ற இருவர் பிடிபட்டனர்

திருச்சியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபரை கடத்திய 2 பேர், கோவையில் அவரது காரை மறைக்கும் முயற்சியின்போது உறவினரிடம் பிடிபட்டு கைதாகியுள்ளனர். திருச்சி பாரதி நகரைச் சேர்ந்த சண்முகவடிவு என்ற பைனான்ஸ் அதிபரை காணவில்லை என, அவரது மனைவி தில்லை நகர் போலீசில் செவ்வாயன்று...

சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் அடி உதை

மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேரையும் மகளிர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் அடித்து உதைத்தனர்.   சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் , குடும்ப நல நீதிமன்றம் உள்ள கட்டிடத்தின் 3ஆவது மாடியில் மகளிர் நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு...

நீட் தேர்வில் பங்கேற்காத பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து, இழப்பீடு வழங்கவும் சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவு

நீட் தேர்வில் பங்கேற்காமல் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றம், அவர்களை பல் மருத்துவ படிப்பில் சேர்த்த சவீதா கல்லூரி தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் பங்கேற்காத 8...

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழகம் முதலிடம் - மாஃபா பாண்டியராஜன்

நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நேரிடும் இடம் தமிழ்நாடு என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நபார்டு வங்கியின் சார்பில் நடைபெற்ற பருவநிலை மாற்றமும் வேளாண்மையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்....

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர், ஆவணக்காப்பக மேலாளர் ஆஜராயினர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் மற்றும் மருத்துவ ஆவணக் காப்பக மேலாளர் ஆஜராகியுள்ளனர். அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில்...