​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயில் கட்டிவிட்டது யாருக்கு ? சீமான் கட்சியினர் குழப்பம்..!

ஜெயில் கட்டிவிட்டது யாருக்கு ? சீமான் கட்சியினர் குழப்பம்..!

 நாட்டில் ஜெயில் கட்டி விட்டிருப்பது நாம் தமிழர் கட்சியினருக்காகத்தான் என்று சீமான் மேடையில் பேசி வந்த நிலையில், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று  நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை காவல்துறைக்கு வேண்டுகோள்...

பணிப்பெண் துன்புறுத்திக் கொலை... இரண்டு பெண்கள் கைது..!

சென்னை பெசண்ட் நகரில் தொழிலதிபர் வீட்டில் 17 வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொலை செய்த தொழிலதிபரின் மனைவி உட்பட இரண்டு பெண்களை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர் . சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த தொழிலதிபர் முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதா தேவி வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதாதேவியின், சென்னை நெற்குன்றம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம்...

செயின் பறிப்புக் கொள்ளையனை துணிச்சலாக பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு காவல்துறை முயற்சியால் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணி நியமனம்

சென்னை அண்ணாநகரில் செயின் பறிப்புக் கொள்ளையனை துணிச்சலாக பிடித்த சிறுவன் சூரியா காவல்துறை முயற்சியால் பிரபல டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை 17 வயதுச் சிறுவன் சூரியா தனியொருவனாகப்...

போரூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்வோருக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வோருக்கு இருசக்கர வாகனத்தில் பொருட்களை கொண்டுசெல்லும் டெலிவரி ஆட்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை போரூரில் நடைபெற்றது. தனியார் நிறுவனமாக ஸ்வெக்கி (( SWIGGY )) நிறுவனம் மற்றும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற இந்த...

தாம்பரம் அருகே தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியின் கூட்டாளிகள் ஆறு பேர் கைது

சென்னை தாம்பரம் அருகே தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியின் கூட்டாளிகள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சூரி என்கிற சூர்யா என்பவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 52 வழக்குகள் உள்ளன. தனிப்படை அமைத்து...

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட நபருக்கு அரிவாள் வெட்டு..!

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் பகுதியில், சரவணன் என்பவரை ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் மூவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அரசியல் பிரமுகர்கள் மீது புகார் அளித்தல், சம்மந்தப்பட்டவரின் ஆதாரங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களில் சரவணன் ஈடுபட்டு...

சென்னை புறநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

சென்னை புறநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தங்க சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட 4 பேரை  குன்றத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து போலீசார்...

கல்லீரலில் காயமடைந்த ஏழை மாணவனின் உயிரைக் காத்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கல்லீரலில் காயமடைந்த மாணவருக்குச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை இன்றி ஆஞ்சியோ எம்பொலைசேஷன் சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த மாணவன் உதயகுமார் பள்ளிக் கட்டடத்தில் இருந்து கால்தவறிக் கீழே விழுந்துள்ளார். அதற்குத் தருமபுரி அரசு மருத்துவமனையில்...

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழக கிளை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழக கிளையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு 2007ம் ஆண்டு...