​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் தேவானந்தன் நேற்று இரவு மீஞ்சூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற திருநங்கைக்கு...

நடிகர் மன்சூர் அலிகான் கைது

சென்னை-சேலம் பசுமைவழிச் சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகானை, சேலம் மாவட்ட போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சேலத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், ஓமலூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்தபோது,...

சந்தோஷபுரத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை தாம்பரம் அருகே, மசாஜ் பார்லரில் வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த 24 வயதான அந்த இளம்பெண், சந்தோஷபுரம் பகுதியில் ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதன் உரிமையாளர்களில் ஒருவரான...

சென்னை ஸ்டார்மிங் ஆபரேஷனில் முக்கிய குற்றவாளிகள் கைது

சென்னையில் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து, 40 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கள்கிழமை மட்டும், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் நகை மற்றும்...

மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களை விட மெட்ரோ ரயில்களில் 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால்...

திமுக இனி மக்களை மட்டுமே நம்பும் - மு.க.ஸ்டாலின்

திமுக இனி மக்களை மட்டுமே நம்பும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் அண்ணாநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனத்...

மு.க. தமிழரசு இல்லம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தமது மகன் மு.க. தமிழரசு இல்லத்துக்குச் சென்றார். உடல்நலக்குறைவால் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மையில் முரசொலி அலுவலகம் மற்றும்  அண்ணா அறிவாலயம் சென்ற அவர், சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழியின் வீட்டுக்கும்...

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 6 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்தவன் கைது செய்யப்பட்டான். எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஹரிநாத், தமது மனைவி நாகமல்லீஸ்வரியுடன் கடந்த 13ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து ரயிலில் சென்னை வந்தார். ரயில் வண்ணாரப்பேட்டையில் மெதுவாகச் சென்ற போது,...

அப்போலோ பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா -ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். குத்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அப்போலோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், சுமார் 900 இளநிலை மற்றும் முதுநிலை...

சென்னையில் மனிதச் செயல்களால் பருவநிலை மாறுபாடு குறித்த கருத்தரங்கு

புவிவெப்பமயமாதலைத் தடுக்க பெட்ரோலியப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்டார்டிகா மற்றும் மனிதச் செயல்களால் பருவநிலை மாறுபாடு என்ற பெயரிலான கருத்தரங்கு சென்னை கோட்டூர் புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளின் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்....