​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவு உற்பத்தி முறை குறித்த சர்வதேச கருத்தரங்கம்..!

உணவு உற்பத்தி முறை குறித்த சர்வதேச கருத்தரங்கம்..!

தொழில் முனைவோர்கள் உணவு உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி வலியுறுத்தினார். அத்தகைய தொழில்முனைவோர்களுக்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்கி ஊக்கமளிக்க தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். உணவு உற்பத்தி முறை...

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க மத்திய அரசு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் மத்திய அரசு உத்தரவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கூடுதல்...

கோயம்பேடு சந்தையில் பழங்கள் விலை அதிகரிப்பு

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகு  விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும் இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும்...

பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் நகைபறித்த கொள்ளையனை கைது

சென்னை காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலையில் தனியாக நடந்தும் செல்லும் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். காசிமேடு முத்தமிழ் நகர் பகுதியில், கடந்த 19ம் தேதி சாலையில் தனியாக நடந்து...

எதிர்காலத்தில் ஏரிகள் வறண்டாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-அமைச்சர்

தண்ணீர் தட்டுபாட்டை போக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் ஏரி, குளங்கள் வறண்டாலும் சென்னைக்கு 870 எம்எல்டி நீரை கொடுக்க முடியும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...

போரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னை போரூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் கழுத்து அறுத்து...

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து

சென்னை புழல் அருகே, சாலையைக் குறுக்கே கடக்க முயற்சித்த இருசக்கர வாகனம் ஒன்று, பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை புழல் சிறைக்கு அருகேயுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே, வடமாநில பதிவெண் கொண்ட சரக்கு...

இந்தியாவின் ஜிடிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் - IOB

அனைத்து வங்கிகளும் இணைந்து, இந்தியாவின் ஜிடிபியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில், இந்திய நிதித்துறையின்...

சர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது

சர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி நாளை சென்னை கோவளத்தில் தொடங்குவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அலைசறுக்குப்போட்டியின் தூதுவரான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜான்டி ரோட்ஸ், திரைப்பட நடிகை ரெஜினா, டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் கூட்டாக...

சென்னை மாநகரை நீடித்த நிலையான நகரமாக்கும் முயற்சி தீவிரம்

சென்னை மாநகரை நீடித்த நிலையான நகரமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச நகர கூட்டமைப்புடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி இரு நகரங்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அறிவுசார் அனுபவங்களை...