​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்

திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்

திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் செலுத்தும் காணிக்கையும் ஒரு வகை லஞ்சம் என பேசியது...

விஷாலுக்கு பாடம் புகட்டிய தியேட்டர் அதிபர்கள்...! சண்டகோழி சரணடைந்தது

திருட்டு விசிடி தயாரித்ததாக 10 திரையரங்குகளுக்கு படம் எதுவும் கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியதால் நடிகர்...

பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக சுசி கணேசன் அவதூறு வழக்கு

பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக திரைப்பட இயக்குனர் சுசிகணேசன், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை மறுத்த சுசிகணேசன், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்...

நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண தேதி, இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண தேதி, இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கும், அவரது நண்பரான நிக் ஜோனசுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து, இருவருக்கும்...

குச் குச் ஹோதா ஹை படத்தின் 20 வது ஆண்டு விழா கோலாகலம்

Kuch kuch hota hai படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது. ஷாருக்கான், கஜோல், ராணி முகர்ஜி , சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை இயக்குனர் கரண் ஜோகர் இயக்கியிருந்தார். இந்த...

பெங்களூரு அருகே அரசு பள்ளியை தத்தெடுத்த நடிகை..!

சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ப்ரணித்தா அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அலுரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடம் நடத்திய நடிகை ப்ரணிதா, அந்த பள்ளியை...

விஷால் – தனுஷ் படப்பிடிப்பு நிறுத்தம்..! தயாரிப்பாளர் கதறல்

தமிழ் சினிமா வெளிப்புற படப்பிடிப்பு குழு சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்ததால் நடிகர்கள் தனுஷ் , விஷால் நடித்து வந்த படங்கள் உள்பட 20 படங்களின் படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டதாகவும் இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர்கள்...

மர்ம நபர்கள் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்

மர்ம நபர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார். அம்பத்தூர் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இன்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் பெல்லா...

ஃபெப்சி - அவுட் டோர் யூனிட் சங்கம் இடையே பிரச்சனையால், 20 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து

ஃபெப்சிக்கும், அவுட் டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையிலான பிரச்சனையால், தனுஷ், விஷால், சிபிராஜ் ஆகியோரின் படங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களின் ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்ஜெட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தேவையான கேமரா, லைட் மற்றும் மினி...

பாரதிராஜாவை விரட்டிய #MeToo கேள்விகள்..! கோபத்தில் வெளியேறினார்

பாலியல் குற்றங்களுக்கான me too அமைப்பு குறித்தும், பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பிய இலங்கை தமிழ் செய்தியாளர்களை, ஒருமையில் அழைத்த இயக்குனர் பாரதிராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பை கைவிட்டு வெளியேறினார். ...