​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவெஞ்சர்ஸ் வரிசையில் 19வது திரைப்படம் அறிமுக விழா, படக்குழுவினர், நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

அவெஞ்சர்ஸ் வரிசையில் 19வது திரைப்படம் அறிமுக விழா, படக்குழுவினர், நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

மார்வல் காமிக்சை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பர் ஹீரோக்களின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 19வது படமான இன்பினிடி வார் ( 'Avengers: Infinity War,') படத்தின் அறிமுக விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது....

கார்ப்ரேட் சுரண்டலை சுட்டிக்காட்டவே மெர்குரி படம்: கார்த்தி சுப்புராஜ்

நடிகர் ரஜினிகாந்துக்கான கதை உருவாக்கம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,  கார்ப்ரேட் நிறுவனங்கள், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே மெர்குரி திரைப்படத்தை எடுத்ததாக தெரிவித்தார். ரஜினிகாந்த் வைத்து எடுக்க...

பாலியல் உறவு பகிர்வு கலாச்சாரத்தை வரவேற்கும் வகையான பழம்பெரும் நடனக் கலைஞர் சரோஜ் கானின் பேச்சால் சர்ச்சை

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதை வரவேற்கும் விதமாக பழம்பெரும் நடன கலைஞர் சரோஜ் கான் ((Saroj Khan)) பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரோஜ் கான், பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது அரசுத் துறைகளில் கூட...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான்...

பத்மாவத் கிளைமேக்ஸ் காட்சியை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பத்மாவத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. படத்தின் இறுதிக் காட்சியில் ராணி பத்மாவதியும், பல்லாயிரக்கணக்கான பெண்களும் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற காட்சி இடம்பெறும். இது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்...

வால்மீகி சமுதாயத்தினரை சல்மான்கான் அவமதித்ததாக தொடரப்பட்ட குற்றவழக்குகள் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

வால்மீகி சமுதாயத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக இந்தி நடிகர் சல்மான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட குற்றவழக்குகள் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. Tiger Zinda Hai என்ற திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியின்போது, வால்மீகி சமுதாயத்தினர் குறித்து ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்து...

அமிதாப்பச்சனை விமர்சித்த பாலிவுட் நடிகை பூஜா பட், குடிகாரி என இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளார்

அமிதாப்பச்சனை விமர்சித்த பூஜாபட் குடிகாரி என விமர்சிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பேட்டி பத்தாவொ பேட்டி பச்சாவோ ((Beti Padhao, Beti Bachao)) இயக்கத்தின் விளம்பரத்தூதரான அமிதாப்பச்சனிடம் கத்துவா மற்றும் உன்னாவோ பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அது குறித்துப்...

வரவேற்பைப் பெற்ற சயீப் அலிகான் மகளின் துள்ளல் நடனம்

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் திருமண விழா ஒன்றில் ஆடிய நடனம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான். சில இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் அவர், மும்பையில்...

Steven Spielberg இயக்கத்தில் வெளிவந்த Ready Player One படம் வசூல் சாதனை

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ரெடி பிளேயர் ஒன் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி டாலர் வசூலை குவித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் எர்நெஸ்ட் கிளைன் என்பவர் எழுதி வெளிவந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட அந்த படம்...

இயக்குநர் பாரதிராஜா வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

இயக்குநர் பாரதிராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதிராஜா, காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்...