​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூகவலைதளத்தில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை

சமூகவலைதளத்தில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கும்படியும், அத்தகைய கருத்து வெளியிட்டவர்களின்  பட்டியலை தாக்கல் செய்யும் படியும் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில்...

குடியுரிமை திருத்த சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அதன்மீதான விசாரணையை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,...

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி...

குடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்துச் சென்றன. காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, உள்ளிட்ட...

பாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..!

பாங்காக்கில் இருந்து கடத்தி  வரப்பட்ட விலங்குகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்தில் இருந்து வரும் விமானத்தில் விலங்குகளை கடத்தி வருவதாக கிடைந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நேற்று வெடிகுண்டுகள் அடங்கிய மர்ம பை ஒன்று...

SSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..!

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால்...

வேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்...

முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன வழக்கில் புது தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவு

முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், அதிக மதிப்பெண்...