​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரி ஓட்டுநரின் உடலில் பற்றி எரிந்த தீ... டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம்

லாரி ஓட்டுநரின் உடலில் பற்றி எரிந்த தீ... டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம்

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பும் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் நிறப்புவதற்காகச் சென்றார். டீசல் சரியாக...

வேளாண் மண்டல சட்டம்: பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்திற்கான அனுமதி ரத்து

தமிழக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டம் அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாப்பதற்காக,...

NPR தொடர்பாக கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? - மு.க.ஸ்டாலின்

என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு சொல்லுங்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேட்டதாக...

IndVsNz முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் அணி முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்த் அணி 51 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் இந்தியா எடுத்திருந்தது. பின்னர் இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய...

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும்..!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அசாம் மாநிலம் தொடர்புடைய தேசிய குடிமக்கள் பதிவேடு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே...

இளைஞரின் மண்டை உடைப்பு - போக்குவரத்து எஸ்.ஐ. மற்றும் கூடுதல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்

சென்னை புளியந்தோப்பில் இளைஞரை மண்டையை போக்குவரத்து எஸ்.ஐ. உடைத்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் வாகன தணிக்கையில் 18ம் தேதி ஈடுபட்டபோது, ஹெல்மெட் அணியாமல் வந்த...

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சம் ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும்...

TNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

TNPSC முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு மற்றும் சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முறைகேடு புகாரில் இதுவரை கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டுமே கைது...

Coldbest PC மருந்துக்கு தடை - அவசர அறிவிப்பு

குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் உள்ளதால், Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை விநியோகிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், Coldbest PC எனப்படும்...

திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் - திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பின்னரே அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்....