​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது

சென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது

பணி ஒதுக்கீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட  பொதுக்கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேரையும், சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  சி.ஏ.ஜி. என்ற மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் கீழ் இயங்கும் தமிழகத்திற்கான...

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு

ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றங்களின் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.எம். தம்புராஜ், ரஜினி மக்கள் மன்றத்தின்...

ஆம்ஆத்மி MLA கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

https://www.youtube.com/watch?v=UhpZKZ6J35oடெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசு தலைவர்...

கனிஷ்க் நகை உற்பத்தி நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது சென்னையில் வழக்குப் பதிவு

824 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கியுள்ள கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது, நிலமோசடி தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரும், பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி.,...

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விவசாயிகள் மாவட்ட...

ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகள் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது பற்றி கடுமையாக விமர்சித்தார். உள்ளாட்சித்...

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், அது எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும்...

மருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை,...

புதுச்சேரியில் பா.ஜ.கவினர் மூன்று பேர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் - உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3பேரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனச் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். மூவரின் நியமனம்...

இந்து சமயநிலையத்துறை கோவில்களுக்குள் இருக்கும் கடைகளில் வணிக நோக்கில் இயங்கும் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் திருகோவிலுக்கு சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு, இணை...