​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் கைது முறைகேடு செய்து வெற்றி பெற்றவர் உள்பட 3 பேர் கைது இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் விசாரணை ராமேஸ்வரம், கீழக்கரை மையங்கள் தவிர்த்து வேறு எங்கும் முறைகேடு இல்லை.....

நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஏராளமான குளறுபடி...

SSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..!

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை விற்றது யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்...

வேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 2 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து நன்கொடை பெறப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

சமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட சென்னையை சேர்ந்த மருதாசலம் என்பவரை, சைபர் கிரைம்...

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உட்பட 12 பேரிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதில்...

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ரஜினி மீது சென்னை, கோவை காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது வழக்கு...

தை அமாவாசை வழிபாடு...! நீர்நிலைகளில் புனித நீராடல்...

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். திருச்சி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது...

குரூப் 4 முறைகேடு: 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் -முறைகேடு நடைபெற்றது எப்படி?

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய, 9...