​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் பட்டு சாலை திட்டத்தால் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என பாகிஸ்தான் அச்சம்

சீனாவின் பட்டு சாலை திட்டத்தால் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என பாகிஸ்தான் அச்சம்

கடன் சுமை ஏற்படும் என்பதால், சீனாவின் பட்டு சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு நாடுகளுடன் எளிதான போக்குவரத்து வசதிக்காக பட்டு சாலை திட்டத்தை...

டெஸ்லா தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

அமெரிக்காவில் மின்சாரக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து எலன் மஸ்க் விலகுகிறார். டெஸ்லா நிறுவனத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் போவதாக எலன் மஸ்க் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832-ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832-ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட 7 புள்ளி 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி ஏற்படக் காரணமானது. பல அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல், 19...

நானும், கிம் ஜோங் உன்னும் காதலில் விழுந்து விட்டோம் - டொனால்ட் டிரம்ப்

தானும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் காதலில் விழுந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு விர்ஜீனியாயாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்....

பெரு நாட்டில் கஜோன் இசைக்கருவி வாசிக்கும் கின்னஸ் சாதனை முயற்சி

பெரு நாட்டில் பாரம்பரிய இசையான கஜோன் இசைக்கருவி வாசிக்கும் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது. தலைநகர் லீமாவில் உள்ள, ஸான் இஸிரிடோ ((San Isidro)) பகுதியில், கெசெரஸ் பூங்காவில், பெருவியன் இசைக்குழு ஒன்றின் சார்பாக கஜோன் இசை வாசிக்கும் போட்டி நடத்தப்பட்டது. மரப்பெட்டி...

அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்தித்தார் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை

கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்ததைத் தொடர்ந்து கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லாரி...

டெஸ்லா தலைவர் பதவியிலிருந்து Elon Musk ராஜினாமா செய்ய முடிவு

அமெரிக்க பங்குச் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, டெஸ்லா கார் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து எலன் மஸ்க் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி,...

இந்தோனேசியாவில் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டியிருக்கிறது. சுலவேசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 7 புள்ளி 5ஆகப் பதிவானது. இதில், கட்டிடங்கள் இடிந்து விழுந்து, மீட்பு பணிகள் நடைபெற்ற வந்த சூழலில்,...

நைஜீரியாவில் பொதுமக்கள் மீது போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்

நைஜீரியாவில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். லேக் சாட் என்ற இடத்தில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 6 பேரும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு...

கஞ்சா கடத்துவதற்கு அமைக்கப்பட்ட சுரங்கம் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் கஞ்சா கடத்துவதற்கு என்றே பிரத்யேகமாக தோண்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய சுரங்கத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வில்ட்ஷையர் ((wiltshire)) என்ற இடத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுரங்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். கஞ்சாவை சேகரித்து...