​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச பாதுகாப்பு முகமை ஏற்படுத்துவது அவசியம் என்று ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும்...

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெல்லப்போகும் அணியை அனுமானம் செய்யும் அதிசய கணிப்புத் திறன் உள்ள வெள்ளைப்பூனை

வெண்பனி உடலுடன் காட்சியளிக்கும் இந்த அழகுப்பூனைதான் இன்று நடைபெறும் முதல் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெல்லப்போகும் அணியை அனுமானம் செய்துள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வசிக்கும் இந்த ஆச்சிலிஸ் என்ற பூனை உலகக் கோப்பையில் வெல்லப் போகும் அணிக்காக கொண்டு...

வடகொரிய போர் பிரச்சனை இனி இல்லை; இரவில் நன்றாக உறங்கலாம் - டொனால்ட் டிரம்ப்

வடகொரிய போர் பிரச்சனை இனி இல்லை என்பதால், இரவு நிம்மதியாக உறங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீண்ட பயணத்திலிருந்து நாடு திரும்பிவிட்டதாகவும், தாம் பொறுப்புக்கு வந்த நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை...

வியாழன் பிற்பகலுக்குள் நேரில் முஷராப் நேரில் ஆஜராக வேண்டும் - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கெடு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பர்வேஸ் முஷாரப், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்த போது தாம்...

சீன அரசக்குடும்பம் பயன்படுத்திய பூச்சாடி ரூ.128 கோடிக்கு ஏலம்

சீன அரசக்குடும்பம் 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய பூச்சாடி ஒன்று, பிரான்சில் 19 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. பிரான்சில் உள்ள ஒரு வீட்டில் அழகிய வேலைபாடுகளுடன் இருந்த பூச்சாடி ஒன்று, பழைய அட்டைப்பெட்டியில் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குடும்பத்தினர், பாரீசில் உள்ள...

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டெஸ்லா நிறுவனம் முடிவு

மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், ஊழியர்கள் சுமார் 3500 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எழுதிய மின்னஞ்சல் கடித விவரம் ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, டுவிட்டரில்...

மெக்சிகோவில் 8.50 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடுகளை புதைபடிவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 11 அடி நீளமும் 500 கிலோவுக்கும் அதிக எடையிலும் இருந்த சிறிய டைனோசரின் படிமங்கள், கொஹுய்லா (Coahuila) கடலோரப் பகுதியில் கிடைத்த மிகப்பழமையான...

60 ஆம் ஆண்டை கொண்டாடும் ஸ்மர்ஃப் கார்ட்டூன் கதாபாத்திரம்

உலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்த ஸ்மர்ஃப் ((Smurfs)) கதாபாத்திரம் அறிமுகமான 60-ஆம் ஆண்டு விழா பெல்ஜியத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நீல வண்ணத்தில் உடல், குள்ளமான தோற்றம், சுறுசுறுப்பு, துடுக்குத்தனமான பேச்சு என ஸ்மர்ஃப் கதாபாத்திரத்தை பார்த்ததுமே குழந்தைகள் மயங்கிப் போவார்கள். பெல்ஜியத்தைச்...

உலகின் மிகக் கொடூரமான போர் முறை விளையாட்டு

உலகின் கொடூரமான விளையாட்டு என வர்ணிக்கப்படும் போர்முறை விளையாட்டு 16ம் நூற்றாண்டில் இருந்து இத்தாலியில் நடைபெற்று வருகிறது. வழக்கமான கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களைப் போலவே இந்த விளையாட்டும் இருக்கும். ஆனால் ஆடப்படும் முறையின் போது எதிராளியை அடித்தும், குத்தியும், கால்களால் உதைத்தும்...

சீனாவில் சிக்கியது பறவை முகம் கொண்ட மீன்

சீனாவில் பறவையின் தோற்றம் கொண்ட அதிசயமீன் ஒன்று ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வடசீனப் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அந்த மீனின் தலைப்பகுதியில் ஒருபுறம் பறவையின் முகச்சாயலிலும், மறுபுறம் டால்பின் போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது. இது மீன் இனத்தைச் சேர்ந்ததா அல்லது...