​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூலில்  தஷ்த் இ பர்ஷி ((Dasht e Barchi)) என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த...

கார் விற்பனையக வாயிற்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார்

சீனாவில் கார் விற்பனையகத்தின் வாயில் கதவை உடைத்துகொண்டு நிறுவனத்திற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய காரால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை ஓட்டத்தை நிறைவுசெய்துவிட்டு நிறுவனத்தின் வாயிற்கதவு முன் காரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுனர் பிரேக்கோடு சேர்த்து accelerator யையும் அழுத்தியுள்ளார். இதனையடுத்து முன்பக்க கண்ணாடி...

தென்சீனக் கடற்பகுதியில் படை நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள சீனாவுக்குப் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட் வேண்டுகோள்

தென்சீனக் கடற்பகுதியில் சீனா தனது படைநடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனப் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவுகளைச் சீனா, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூனே ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. சீனா தென்சீனக் கடற்பகுதியில்...

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவையும் (Genoa) தெற்கு ஃபிரான்சையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெனோவா நகரில் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்டப் பாலத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து...

அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் திருநங்கை கவர்னர்

அமெரிக்காவில் முதன்முறையாக Christine Hallquist என்கிற திருநங்கை கவர்னர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். Vermont மாகாண கவர்னர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில்...

இம்ரான்கான் அரசு இந்தியாவுடன் அமைதி அணுகுமுறைக்கு விருப்பம் - இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சு

பாகிஸ்தானில் பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் அரசு இந்தியாவுடன் அமைதியான அணுகுமுறையை விரும்புவதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமது (Sohail Mahmood) தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் கொடியேற்றி வைத்துப் பேசிய அவர், அண்மையில் பிரதமர்...

அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும் பெயர்போன சிஜியா பாண்டா கரடி

சீனாவில் அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும் பெயர்போன சிஜியா (Sijia) பாண்டா கரடி, தமது 12-வது பிறந்த நாளை சிறப்பு விருந்துகளோடு கொண்டாடி மகிழ்ந்தது. ஹெய்லாங்ஜியாங் (Heilongjiang) பகுதியில் உள்ள யபுலி ஸ்கை ரிசார்ட்-ன் உயிரியல் பூங்காவில் சிஜியா என்ற பாண்டா கரடி வசித்து...

அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பதிலடி

பொருளாதார நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஐபோன் உள்ளிட்ட அமெரிக்க மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க உள்ளதாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் சபதம் ஏற்றுள்ளார். ஸ்டீல், அலுமினியத்துக்கு இறக்குமதி வரியை அமெரிக்க அரசு இருமடங்காக அதிகரித்த நிலையில் துருக்கி பணமான லிராவின் மதிப்பு விறுவிவென...

விண்வெளியில் ராணுவ படை நிறுவும் அமெரிக்க அதிபரின் திட்டத்திற்கு நாசாவின் நிர்வாகி முழு ஆதரவு

விண்வெளியில் ராணுவப் படை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு நாசாவின் நிர்வாகி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் விண்வெளி சொத்துகளான செயற்கைக் கோள்கள், ஜி.பி.எஸ். தொழில்நுட்பங்களை பாதுகாக்க வேண்டி உள்ளதால், விண்வெளிப் படையை நிறுவ வேண்டும் என...

தைவான் நாட்டில் சுற்றுலா பயணிகள் படகு தீப்பிடித்தது - 2 பேர் காயம்

தைவான் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர். தைவான் நாட்டில் 44 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று கடலுக்குள் சென்று கொண்டிருந்தது. அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை...