​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.8 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல பெஷாவர்,...

மயில் போல மணநாளுக்கு கேக் ஆர்டர் செய்த மணமகள்

மயில் போல மணநாளுக்கு கேக் ஆர்டர் செய்து ஆர்வத்தோடு காத்திருந்த மணமகள் தொழுநோய் வந்த வான்கோழி போல விநியோகிக்கப்பட்ட கேக்கை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். ஜார்ஜியாவைச் சேர்ந்த ரெனா டேவிட், அழகிய மயில் தோகை விரித்து 2 அடுக்கு கேக் மீது...

தன் பயணத்தை நிறைவு செய்கிறது எனர்ஜி அப்சர்வர்

மிதக்கும் ஆய்வுக்கூடாமாகவும், ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது கப்பல் எனவும் கூறப்படும் எனர்ஜி அப்சர்வர் லண்டனில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளை அறிந்தவர்கள் ஒன்றுகூடி மின்சாரம், காற்று மற்றும் ஹைட்ரஜனில்...

"Kill The Gays" - ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை

உகாண்டாவில் “கில் த கேஸ்’ (kill the gays) எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டாவில் ஏற்கெனவே அமலில் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்...

தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சும் குழாயைக் கொண்டு தீ பரவுவதை தடுக்க முயற்சி - குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலியாவில் பயங்கர தீயை அணைப்பதற்கு தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் குழாயைக் கொண்டு தீயணைப்புத்துறை வரும் வரை தன்னந்தனியாக போராடியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 9-ம் தேதி, ஷெப்பர்டான் என்ற நகரில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, பல...

ஜப்பானில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் நடவடிக்கை

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் உதவிடன் மீட்கப்பட்டனர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேகம் என்று பொருள்படும் அதி சக்தி வாய்ந்த ஹகிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை...

இந்தியாவில் பிறந்தவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

வறுமையை ஒழிக்க உதவும் முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக அமெரிக்க வாழ் இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல்...

அதிபர் தேர்தலில் கைஸ் சையீத் 76.9 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல்

துனிசியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கைஸ் சையீத் 76 சதவீத வாக்குகள் பெற்றிருக்கலாம் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியதை அடுத்து ஆயிரக்கணக்கான துனிசியர்கள் சாலையில் திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். துனிசியா நாட்டில் 6வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில்...

ஹபீஸ் சையதையும் கைது செய்ய பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா கண்டிப்பு

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 4 பேரை கைது செய்ததோடு நிறுத்திவிடமால், மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் ((FATF)) பாகிஸ்தானை...

பனிப்பொழிவால் மூடிய சாலைகள் - போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

மத்திய மற்றும் வடக்கு அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட பனிப்பொழிவால் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு டகோடா பகுதியில் உள்ள குல்ம் நகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலால்  சாலைகள் முழுவதும்...