​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை

மலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு மலேசியாவிலுள்ள இரு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. ஒரு மாநிலத்தில் அவர் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்தியாவால் தேடப்படும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக்...

"இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்" - பாகிஸ்தான் ராணுவம்

இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவம், கூறியிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை பன்னாட்டு பிரச்சினையாக பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தானின் அந்த முயற்சியும் படுதோல்வி அடைந்திருப்பதால்,...

உணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் கொடூர பசியில் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..!

பிரான்ஸ் உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டுவரப்பட்டதால் கொடூர பசியில் இருந்த வாடிக்கையாளர் ‘வெயிட்டரை’ சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. பாரீஸில் நாயிசி-லீ-கிராண்ட் (Noisy-le-Grand) எனும் இடத்தில் உள்ள ‘பீசா மற்றும் சான்ட்விச்’ கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சான்ட்விச்...

சூடானில் தேசிய கொடியுடன் ரயில் மீது ஏறி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மக்கள்..!

சூடானில், எதிர்கட்சிகளுடன் ‘அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும்’ ராணுவத்தினரின் ஒப்பந்தம் இறுதியானதை அடுத்து, அந்நாட்டு மக்கள் சாலைகளில் திரண்டு வெற்றியை கொண்டாடினர். சூடானில் நீண்ட நாட்களாக ஆட்சி செய்த அதிபர் ஓமல் அல் பஷிருக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தியதை அடுத்து, பலர் கொல்லப்பட்டனர்....

ஜார்ஜியாவில் நடைபெற்ற ‘டாக்கி கான்’ என்ற நாய் கண்காட்சி

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், விநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ‘டிராகன் கான் பாப்’ என்ற செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல வித நாய்கள்...

ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி பிரான்ஸில் பேரணி நடத்திய சீன மாணவர்கள்

‘ஒரே நாடு, இரு அமைப்புகள்’ என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, பிரான்சில் வசிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட சீன மாணவர்கள் அந்நாட்டு கொடியுடன் பேரணி நடத்தினர். ஹாங்காங் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும், தனி அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஹாங்காங்கில் குற்றச்சாட்டப்படுவர்களை...

ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி 5 லட்சம் பேர் பேரணி

அமைதி திரும்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பேரணி நடத்தியதால் ஹாங்காங் குலுங்கியது. ஹாங்காங்கில் குற்றவழக்கில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கியதால், அதுதொடர்பான மசோதா தற்காலிகமாக...

வங்கதேசத்தில் வீடுகள் தீயில் கருகியதால் 50,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு..!

வங்கதேச தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்காவில் மிர்பூர் எனும் இடத்தில் குடிசை பகுதி உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வரிசையாக இருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பிளாஸ்டிக் போன்ற...

சீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி

சீனாவில் சர்வதேச விமானக் கண்காட்சியில் நிகழ்த்தப்பட்ட, பல்வேறு ரக விமானங்கள் மற்றும் பாராகிளைடிங் சாகசங்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். சீனாவின் லியானிங் (Liaoning Province) மாகாண தலைநகரில், 8ஆவது ஷென்யாங் (Shenyang) சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து,...

ஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி வளைத்த பிரிட்டன் கடற்படை

சிரியாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கிரேஸ் 1 என்ற ஈரான் எண்ணெய் கப்பலை , பறிமுதல் செய்யும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து ஜிப்ரால்டர் கடல்பகுதியில் பிரிட்டன் கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அக்கப்பலில் உள்ள குழுவினர் கப்பலுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக தமிழகத்தின் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த...