​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி கடற்கரையில் கோடை விடுமுறைக் கொண்டாட்டம்..!

புதுச்சேரி கடற்கரையில் கோடை விடுமுறைக் கொண்டாட்டம்..!

கோடை விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோடை விடுமுறையை கழிப்பதற்காக குழந்தைகளுடன் புதுச்சேரி சென்றுள்ள பயணிகள் கடற்கரையில் பொழுதைக் கழித்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கடற்கரையில் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் அந்தச் சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. படகு...

ராஜ்கோட்டில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் கட்டிவைத்து சரமாரியாக அடித்துக் கொலை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கட்டிவைத்து சரமாரியாக அடித்துக் கொல்லப்பட்டார். குஜராத் மாநில எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி ((Jignesh Mevani)) டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒருவரை இரண்டு பேர் கயிற்றால் கட்டிவைத்து தடியால் சரமாரியாகத் தாக்குவதும் வலி...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை வணிகநேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 68ரூபாயைத் தொட்டது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு மேலும்...

விஜயவாடாவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இடம்பெற்று இருந்தன. சுற்றுச்சூழலை பாதுகாக்க, உரங்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று, விஜயவாடாவில்...

கர்நாடக துணை முதலமைச்சர் பதவிக்கு காங்கிரசின் டி.கே.சிவக்குமார் குறி..!

கர்நாடகா துணை முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது பணிக்காக மேலிடம் நியாயமான பதவியை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதற்காக, பெங்களூரில் உள்ள கண்டீரவா...

கேரளாவில் பரவும் Nipha எனும் உயிர் கொல்லி வைரசால் பீதி - 11 பேர் உயிரிழப்பு

  நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலால் கேரளத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிர்கொல்லியான நிபா வைரஸ் தாக்கி கேரள மாநிலத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது....

கர்நாடக அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள நேரில் வரவேண்டும் - ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  நேற்றுச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்....

மும்பை ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மும்பை ஜேஜே மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த...

பதிலடி தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் கெஞ்சிய பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படைக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பதுங்கு குழிகளை...

தேர்தல் நடத்தை விதிமுறையால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடுவதாக சட்ட ஆணையத்தின் கருத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்படும் நடத்தை விதிமுறையால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடுவதாக மத்திய சட்ட ஆணையம் கூறிய கருத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மத்திய சட்ட ஆணைய...