​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ போலியானது - காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் கருத்தால் திடீர் திருப்பம்

காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ போலியானது - காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் கருத்தால் திடீர் திருப்பம்

கர்நாடகாவில் லஞ்சம் கொடுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்எல்எ ஷிவராம் ஹெப்பர் தெரிவித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த சமயத்தில் பாஜக தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை...

வெறுப்புணர்வு சிறை போன்றது என்பதை தந்தை கற்பித்திருக்கிறார்-ராஜீவ் காந்திக்கு ராகுல் காந்தி அஞ்சலி

வெறுப்புணர்வு என்பது சிறை போன்றது என்பதை தனது தந்தை ராஜிவ்காந்தி தனக்கு கற்பித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜிவ் காந்தியின் நினைவு நாளையொட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், தந்தையிடமிருந்து, மகனுக்கு வழங்கப்படும் உயரிய பரிசாக,...

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு, அதிபர் விளாடிமிர் புதின் உடன் சந்திப்பு

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, கருங்கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் சோச்சி (( sochi...

கச்சா எண்ணெய்க்கு நிலையான, நியாயமான விலை தேவை :சவுதி அரேபிய அரசுக்கு தர்மேந்திர பிரதான் கோரிக்கை

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், நிலையான, நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என சவுதி அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வெனிசுலா, லிபியா போன்ற நாடுகளில் பொருளாதார பிரச்சினைகளால்...

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை - DRDO, பிரமோஸ் குழுவினருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

இந்தியாவின் ஒடிசா கடற்கரைப் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. பிரமோஸ் ஏவுகணையின் திறனை மேம்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காலை 10.40 மணியளவில் ஒடிசாவின் சந்திப்பூர் தளத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு...

விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்., ம.ஜ.த. எம்எல்ஏ.க்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்

கர்நாடகத்தில் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முதலமைச்சராக வரும் புதன் கிழமை பதவியேற்க உள்ள குமாரசாமி, மறுநாளே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார். அதுவரை...

மத்தியபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரும் தீ விபத்து..பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்சேதம் தவிர்ப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஆந்திரப் பிரதேச விரைவு ரயிலில் தீப்பிடித்ததில் குளிர்வசதி கொண்ட 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. புதுடெல்லிக்கும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கும் இடையே ஆந்திரப்பிரதேச விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 6.25மணிக்குப் புதுடெல்லி நிலையத்தில்...

உயிர்க்கொல்லியான நிபா வைரஸ் பரவும் விதம் குறித்து செய்தி தொகுப்பு

உயிர்க்கொல்லியான நிபா வைரஸ் பரவும் விதம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நிபா ((Nipah)) வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாகவும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ்...

ஒடிசாவில் 26ஆம் தேதி பாஜகவின் நான்கு ஆண்டு நிறைவு விழா..!

மத்தியில் பாஜக ஆட்சியின் நான்காண்டு நிறைவு விழா வரும் 26ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். மாநாட்டு அரங்கம், மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த...

ஆளுநர்களை வைத்து ஆட்சி மாற்றத்துக்கு பாஜக இனி முயற்சிக்க முடியாது - நாராயணசாமி

கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணும் கட்சிகளுக்கு கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு...