​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமலை ஏழுமலையான் கோவிலில் கனமழை

திருமலை ஏழுமலையான் கோவிலில் கனமழை

திருப்பதி, திருமலையில் நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து பலமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்து  தங்குவதற்கு அறைகள் கிடைக்காத பக்தர்களும்,  ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். கனமழையால்...

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வழங்காததன் மூலம், ஹெச்ஏஎல் ஊழியர்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டது - ராகுல்காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வழங்காததன் மூலம், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன ஊழியர்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். பெங்களூருவில் இயங்கி வரும் அந்த பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும், முன்னாள்...

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு

அரியானா மாநிலம் குருகிராமில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்காடியா சந்தை என்ற இடத்தில் நீதிபதியின் மனைவியும், மகனும் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம்...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைப் போராட்டம் - கேரள சிவசேனா அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சிவசேனா கட்சி, தற்கொலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் கேரள மாநில நிர்வாகி பெரிங்கமலா அஜி, தங்கள் கட்சியின் பெண் உறுப்பினர்கள் வரும்...

சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயாள் உய்க் பாஜக-வில் இணைந்தார்

இன்னும் ஒரு மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள சத்தீஸ்கரில், காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயாள் உய்க் ((Ram Dayal Uike)) பாஜக-வில் இணைந்துள்ளார். சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. நவம்பர்...

நெதர்லாந்தில் பாஸ்போர்ட்டை தொலைத்த பேட்மிண்டன் வீரர் காஷ்யப்

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பாஸ்போர்டை தொலைத்துவிட்டதாக, பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ட்விட்டர் மூலம் உதவி கோரியுள்ளார். இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீரரான பாருப்பள்ளி காஷ்யப், ஓடென்ஸ் நகரில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க சென்றபோது, பாஸ்போர்ட்டை...

ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவி செய்ய ஆழ்கடலடி மீட்புக் கலம் (DSRV) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது

ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவி செய்யவும், தேடுதலுக்கு உதவும் வகையிலும், ஆழ்கடலடி மீட்புக் கலம் ((DSRV - Deep Submergence Rescue Vessel)) முதன்முதலாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவ விரைந்து அனுப்பும் வகையில், வான்வழியாகவும்,...

ஒடிசாவில் "டிட்லி" புயல் பாதித்த பகுதிகளில், கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம்

ஒடிசாவில் "டிட்லி" புயல் பாதித்த பகுதிகளில், கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டிட்லி புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், கஞ்சாம், ராயஃகடா, கஜபதி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. புயல் மற்றும் மழை வெள்ளத்திற்கு 20 பேர் வரை...

நர்மதா அணை அருகே நிறுவப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரம்

குஜராத் மாநிலம் நர்மதா அணை அருகே நிறுவப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 182 மீட்டர் உயரம் கொண்ட படேல் சிலையை பிரதமர் நரேந்திரமோடி வரும் 31 ஆம் தேதி திறந்து  வைக்க...

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் உண்மையா என ஆய்வு செய்யப்பட வேண்டும் : அமித்ஷா

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்த போது பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் பத்திரிகையாளர்கள் சிலர்...