​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வழக்காடுவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.  அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் உறுப்பினராக உள்ளவர்கள், வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுவதன் மூலம் இரட்டை ஆதாயத்தை...

குற்றப் பின்னணி கொண்ட MP க்கள், MLA.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு

குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை...

விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ரெய்காட், ஜல்னா மற்றும் புனே பகுதிகளில் சிலைகளைக் கரைக்கும் போது நீரில் மூழ்கியும் சிலைகளால்...

பீகார் மாநிலத்தில் முன்னாள் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

பீகார் மாநிலத்தில் முன்னாள் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. முசாபர்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சமீர் குமார். இவர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது பனாரஸ் பங்க் என்ற இடத்தில் மர்ம நபர்கள்...

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு எந்திரங்கள்

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்குச் சீட்டுக்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள...

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் நடத்திவரும் பாதயாத்திரை 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்துள்ளது. பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் இருந்து அவர் யாத்திரையைத் தொடங்கினார். 11...

பிரதமர் மோடிக்கு தமது அன்பைத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடிக்கு தமது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச் சபையின், போதைப் பொருள் கடத்தல் தடுப்புக்கான கூட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ட்ரம்பைச் சந்தித்த சுஷ்மா...

மருத்துவமனையில் பெண்ணுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவுரான் என்ற இடத்தில்...

வடமாநிலங்களைப் புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு...

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 60க்கும் மேற்பட்டோர் இமாச்சலப் பிரதேசத்தில் தவித்து வருகின்றனர். இமாச்சலபிரதேசம், உத்ரகாண்ட், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களின்...

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நுழைந்து, கட்சியின் நிர்வாகி ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகூர் - குடியிருப்புப்பாளையத்தை சேர்ந்த விஜயபாலன்,  புதுச்சேரி மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் திங்களன்று வழக்கம்போல கட்சி அலுவலகத்தில் இருந்தபோது,...