​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக ஆளும் 14 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பாஜக ஆளும் 14 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பாஜக ஆளும் 14 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஜன்தன், முத்ரா, உஜாவலா போன்ற மத்திய அரசின் திட்டங்களை மக்கள் முன்பு கொண்டு செல்வதும் அது குறித்த பிரச்சாரம் செய்வது...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் மார்ச் 30ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. இதில்...

அமைச்சர் O.S.மணியனின் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் என முதற்கட்டப் பிரேதப் பரிசோதனையில் தகவல்

அமைச்சர் ஓ.எஸ். மணியனின் ஓட்டுநர் மாரடைப்பாலேயே உயிரிழந்ததாக முதற்கட்டப் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, மரணத்தில் இருந்த மர்மம் விலகியுள்ளது.  சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில்...

மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அறிவுரை

அ.தி.மு.க. அரசை குற்றம்சொல்வதையே கடமையாக வைத்திருந்தால், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.  ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமை,...

கார் ஓட்டுநரின் மரணத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் O.S.மணியன் விளக்கம்

மரணத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுனர் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓட்டுனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற போது தான் வீட்டில் இல்லை என்ற ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா...

மருத்துவக்கல்லூரி தாம் அமைத்ததாக சொல்லியதில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில்அரசு மருத்துவக்கல்லூரியை தாம் கொண்டு வந்ததாக எப்போதுமே சொல்லியதில்லை என்று, செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் விமர்சனத்திற்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கார் விளக்கமளித்துள்ளார். கரூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்....

அமைச்சர் O.S.மணியனின் கார் ஓட்டுநரின் மரணத்தில் சர்ச்சை, அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சருக்கு உறவினர்கள் எதிர்ப்பு

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுனர் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் ஓட்டுனருக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஓ.எஸ்.மணியன் திரும்பிச் செல்ல நேரிட்டது. சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த...

திமுகவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட என்னை எந்தக் காரணமும் இன்றி தூக்கியெறிந்துவிட்டனர் - டி.ராஜேந்தர்

  திமுகவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தான் எந்தக் காரணமும் இன்றி தூக்கி எறியப்பட்டதாக கூறி டி.ராஜேந்தர் கண் கலங்கினார். சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க.வில் தியாகிகள் விரட்டியடிக்கப்பட்டு துரோகிகள் அரவணைக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு பல...

நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜொனாதன் சங்மா பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி...

ஸ்டாலினின் அரசியல் வாழ்வுக்கு துணையிருப்பேன்: துர்கா ஸ்டாலின்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் எப்போதுமே துணையாக இருக்க தாம் விரும்புவதாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துர்கா ஸ்டாலின் எழுதிய "அவரும் நானும்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்றது. இதில்,...