​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் ரூ.50 கோடியில் தமிழர் பண்பாட்டு மையம் - மா.பா.பாண்டியராஜன்

மதுரையில் ரூ.50 கோடியில் தமிழர் பண்பாட்டு மையம் - மா.பா.பாண்டியராஜன்

மதுரையில் 50கோடி ரூபாய் செலவில் தமிழர் பண்பாட்டு மையத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பேசிய அவர், இதற்காக முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்....

பெண்கள் பாதுகாப்புக்கு மதுவிலக்கு அவசியம் - தமிழிசை

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு அவசியம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அரசியலுக்கு வரும் நடிகர்கள் மதுக்குடிப்பவர்களை ஊக்கப்படுத்துவது போல் பேசுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்...

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளை, அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகம் முழுவதும்...

காவிரி விஷயத்தில் மத்திய அரசு பச்சைத்துரோகம் செய்து வருகிறது என வைகோ குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கூறிய நிதின் கட்காரி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர...

அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் GST தொடர்பான கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஜி.எஸ்.டி கவுன்சில் செயலாளர் ஹஸ்முக் ஆதியா மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஜூலை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது....

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று  8 மணிக்குத் தொடங்குகிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. திரிபுராவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் இறந்ததால்...

அரசியலமைப்பை மாற்றாதவரை இந்தியாவில் எதையும் மாற்ற இயலாது -வருண் காந்தி

இந்தியாவில் அரசியல் அமைப்பை மாற்றாதவரை எதையுமே மாற்ற முடியாது என்று பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கூறினார். கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டியூஷன்ஸ் கல்லூரியில் மாணவர்களிடையே பேசிய அவர், அரசியல் பின்புலமின்றி சுயமாக செயல்படும் வகையில் பொது...

ப.சிதம்பரமும் ஊழல் செய்துள்ளதாகத் தமிழிசை குற்றச்சாட்டு

கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் ஊழல் செய்துள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஐஎன்எக்ஸ் மீடியா லஞ்ச ஊழல் வழக்கில் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி கைதுசெய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். கார்த்தி...

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு அரசியல் நோக்குடையது- அமைச்சர் க.பாண்டியராஜன்

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு அரசியல் நோக்கம் கொண்டது என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று...