​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலித்துகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள போதும் பிரதமர் மோடி பேசாமல் மவுனம் சாதிப்பது ஏன் - ராகுல்

தலித்துகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள போதும் பிரதமர் மோடி பேசாமல் மவுனம் சாதிப்பது ஏன் - ராகுல்

தலித்துகளின் போராட்டம் ஏழு மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ள போதும் அதுகுறித்து பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசாமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.கர்நாடக சட்டச்பைத் தேர்தலையொட்டி, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ஹோனல்லி, தவன்கரே...

கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, அமித் மால்வியாவிடம் விசாரணை - அமித் மால்வியா

கர்நாடக தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக தொழிநுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியாவிடம் விசாரணை நடைபெறுவதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்....

நியூட்ரினோ ஆய்வகத்தால் முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும் - வைகோ

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அணைகள் உடையும் அபாயம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு இளைஞன்...

திருச்சியில் இன்று நடக்கிறது மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் திருச்சியில் ஏப்ரல் 18ம் தேதி...

காவிரி விவகாரத்தில் கபட நாடகம் ஆடியது தி.மு.க.தான் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் கபட நாடகம் ஆடியது தி.மு.க.தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. அமைச்சர் ஜெயகுமார் மற்றும் அ.தி.மு.க....

திருச்சியில் கமலுக்கு உற்சாக வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டிற்காக ரயில் மூலம் திருச்சி சென்றடைந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் வைகை விரைவு ரயிலில் புறப்பட்ட கமல்ஹாசன், வழியில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த பொதுமக்களைப்...

தெம்பும் திராணியும் இருப்பதால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில்

அதிமுக அரசுக்கு தெம்பும் திராணியும் இருப்பதால்தான் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குளக்கரை திடல் அருகே அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க....

டெல்லி சென்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் அலுவலகத்தில்...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 19ஆவது நாளாக ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் 19ஆவது நாளாக முடங்கியது. மக்களவையில், செவ்வாய்க்கிழமை காலையில், கேள்விநேரம் தொடங்கியது. காவிரி விவகாரத்திற்கு நீதி கோரி தமிழ்நாட்டு எம்.பிக்களும், சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பிக்களும் என எம்.பிக்கள் பலரும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, முழக்கம் எழுப்பியதால், அவை பகல் 12...

மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை - H.ராஜா விளக்கம்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்காததால்தான் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் அளிக்கும் விளக்கங்களின் அடிப்படையில், தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு...