​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகரங்களை கட்டி எழுப்ப முடிகிறதோ இல்லையோ, பொய்களை கட்டி எழுப்பும் கலை பிரதமருக்கு எளிதாக வருகிறது: ராகுல்

நகரங்களை கட்டி எழுப்ப முடிகிறதோ இல்லையோ, பொய்களை கட்டி எழுப்பும் கலை பிரதமருக்கு எளிதாக வருகிறது: ராகுல்

நகரங்களை கட்டி எழுப்ப முடிகிறதோ இல்லையோ, பொய்களை கட்டி எழுப்பும் கலை பிரதமர் மோடிக்கு எளிதாக கைவருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் பெங்களூரை பாவங்களின் நகரமாகவும்,...

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணம்

கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜெயநகர் தொகுதியில் 2 முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பி.என்.விஜயகுமார். கர்நாடகாவில் வரும் 12 -ம் தேதி நடைபெறும் தேர்தலில், அவர் 3-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுவதால் பிரச்சாரம்...

வெளிமாநிலங்களில் நீட் மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அரசு உடனடியாக உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  நீட் தொடர்பாக பாதிக்கப்படும் மாணவர்கள் கேட்கும் எந்த நீதியையும் அளிக்க விடக்கூடாது என்பதில் மத்திய பா.ஜ.க....

மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என நிர்மலா சீதாராமன் ஆய்வு

மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில், பின்தங்கிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடுமுழுவதும் இதுபோல 16 ஆயிரம் கிராமங்கள்...

ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை களவாடி வெளியிட்டுதான் டிடிவி.தினகரன் வெற்றிபெற்றதாக திவாகரன் விமர்சனம்

சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை களவாடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றிபெற்றதாக, திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மா அணியின் முதல் சுற்றுப்பயணத்தை ராயபுரத்தில் நேற்று தொடங்கிய திவாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் மேலும் பல சிடிக்கள், சசிகலாவிடம் இருக்கலாம் என்றும் கூறினார்....

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அநீதி - வைகோ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வைகோ, காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு செயல் என்று விமர்சித்தார்....

திருநாவுக்கரசரும், ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 4 டிஎம்சி தண்ணீரைத் தருமாறு காங்கிரசும், திமுகவும் கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 150 ஆண்டுகால காவிரிப்பிரச்சினைக்கு முந்தைய அரசுகளைப் போல அவசரப்படாமல், மோடி அரசு ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் என நம்புவதாகவும் குமரி...

குட்கா ஆலை விவகாரத்தில் உள்ளூர் தி.மு.க.வினருக்கு தொடர்பு - MLA கனகராஜ்

கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரத்தில் உள்ளூர் தி.மு.க.வினருக்கு தொடர்பு இருப்பதாக சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார். சூலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக்கு அனுமதி வழங்கியது தி.மு.க. பேரூராட்சி முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் என்றும்,...

முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கு கால்கோள் விழா - அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 வது குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக வரும் 11ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான கால்கோள் நடும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்...

குட்கா விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு CBI அலுவலகத்தில் திமுக MLA அன்பழகன் மனு

குட்கா விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ அன்பழகன் மனு அளித்துள்ளார். அரசியல் காரணமாக வழக்குத் தொடரவில்லை என்று கூறிய அவர், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருளால், இளைய சமுதாயத்தினர் புற்றுநோய்...