​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபாநாயகர் அலுவலத்தில் அமர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா

சபாநாயகர் அலுவலத்தில் அமர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரியில் அவசர சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி அதிமுக மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியும் பாதிக்கப்படும் என எதிர்கட்சியினர் கூறி...

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தன் கட்சியில் உள்ள தலைவர்களின் பெயர்களே தெரியாது -மோடி

ஹெலிகாப்டர் வாங்கிய ஊழலில் யார் யாருக்குப் பங்குள்ளது என்கிற உண்மையை கிறிஸ்டியன் மிக்கேல் சொல்லிவிடுவார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுமேர்ப்பூர் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கஜா புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்....

நிவாரண முகாம்களில் இருப்போருக்கு ரூ. 5000 வாழ்வாதாரத்தொகை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வாழ்வாதாரத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 36 ஊராட்சிகளுக்கு கொசுமருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும்...

தமிழக விவசாயிகள் நடத்தும் அரைநிர்வாணப் போராட்டங்களை அனுமதிக்ககூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக விவசாயிகள் நடத்தும் அரைநிர்வாணப் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பேசிய அவர், விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக கட்டாயமாக குரல் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் உரிமைகளுக்காக நடத்தும்...

குமாரசாமி, எடியூரப்பா, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உள்பட அரசியல் கட்சியினர் 4 ஆயிரத்து 122 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி உடைய தலைவர்களைத்...

கல்யாண வீட்டில் கதறி அழும் பழக்கம் கொண்டவர் வைகோ - பொன். ராதாகிருஷ்ணன்

வைகோவிற்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று தெரியாது என்றும் கல்யாண வீட்டில் கதறி அழும் பழக்கம் கொண்டவர் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். ...

தமிழகத்தை புறக்கணித்துவிட்டு தேசிய கட்சிகள் ஆளமுடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வெளிநாடுகள் பலவற்றில் அரசாங்கங்களை தீர்மானிக்கும் இடத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அப்படி இருக்கையில் இந்தியாவில் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு காங்கிரசோ, பிஜேபியோ ஆளமுடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்த அமைச்சர் செய்தியாளர்களை...

மேகதாது திட்டத்தில் ஆய்விற்காக மட்டுமே மத்திய அரசு கையெழுத்து - தமிழிசை

மீத்தேன் திட்டத்தில் ஸ்டாலின் ஆய்விற்காக மட்டுமே கையெழுத்திட்டதாக தெரிவித்ததாகவும், அதுபோல மேகதாது திட்டத்திற்கு ஆய்விற்காக மட்டுமே மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டதாக ஒப்புக்கொண்டால்,...

காங்கிரசின் தவறுகளை சரிசெய்வதே தனது விதியாகி விட்டதாக பிரதமர் மோடி வேதனை

நாட்டில் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை சரிசெய்வதே தமது விதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹனுமன்கரில் நடைபெற்ற...