Advertisement

Bitcoin முறைக்கு புதிய கொள்கைகளை வகுக்க மத்திய அரசு முடிவு

பிட்காய்ன் எனப்படும் விர்சுவல் கரன்சிகளுக்கான கொள்கைகளை வகுக்க புதிய குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணைய உலகில் பிட் காய்ன் ((Bitcoin)), எத்தீரியம் ((Ethereum)), மொனீரோ ((Monero)) உள்பட பல்வேறு விதமான விர்சுவல் கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன. இதை கண்ணால் பார்க்கவோ, சட்டரீதியாகவோ பயன்படுத்த முடியாது எனும் நிலையில், பிட் காயினில் இப்போது முதலீடு செய்தால், ஒரு சில மாதங்களில் பெரும் தொகையை லாபமாக ஈட்டலாம் எனக்கூறி மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையில் பிட் காய்ன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவிலும் அதை சட்டரீதியாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதற்கான கொள்கைகளை வகுக்க புதிய குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன