காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...
சினிமாவை பார்த்து பஞ்சுருளி நடனமாடுவதாக பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட திகில் காட்சிகள் தான் இவை..!
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா அருகே, விநாயகர் ஊர்வலத்தில் பஞ்சுருளி வேடம் அணிந்தவர்களை சுற்றி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நடனம் ஆட ஏற்பாடு செய்தனர்
காந்தாராவில் வருவது போல அந்த கூக்குரல் ஒழிக்க தீயை பற்றவைத்தனர். அடுத்த நொடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தீயில் விழுந்து அலறியடித்தனர்.
கூட்ட நெரிசலில் 6 சிறுவர்கள் தீயில் விழுந்த நிலையில், பஞ்சுருளி நடன கலைஞர்கள் இருவர் மீதும் தீப்பற்றியது
மொத்தம் 8 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இருவரது உடல் நிலை கவலைக்கிடமல்மாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சினிமாக்களில் தீ பற்றும் காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப் படுகின்றது. அதனை நிஜத்தில் செய்வதாக முயன்று நிஜமாகவே பயர் விட்ட நபர்களால் இந்த விபரீத தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.