தனது வயலில் களை பறிக்க பெண்களுக்கு 500 ரூபாயும் ஆண்களுக்கு 500 ரூபாயோடு, குவார்ட்டரும் கொடுப்பதாக தெரிவித்துள்ள சீமான், குவார்ட்டர் கொடுத்தால்தான் ஆண்கள் வேலைக்கு வருவதால் பெட்டி பெட்டியாக குவாட்டர் வாங்கி வைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
நாட்டில் எங்காவது மகளிர் உரிமைத் தொகை கேட்டோ அல்லது கல்லூரிக்கு செல்லும் போது ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்றோ மக்கள் போராட்டம் நடத்தினார்களா என கேள்வி எழுப்பினார்.
ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத அளவு மக்களை வைத்துள்ளதாக சாடிய சீமான், தனது வீட்டில் களை எடுக்கும், காய்கறி பறிக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயும், ஆண்களாக இருந்தால் 500 ரூபாயுடன் குவாட்டரும் சேர்த்துக் கொடுப்பதாக கூறினார்.
இதற்காக பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.