கேரளாவில் பலத்த மழைக்கிடையே கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இயக்கப்பட்ட கார் ஆற்றில் மூழ்கியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, இரவு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கனமழை பெய்ததாகக் கூறப்படும் நிலையில், வழக்கமான வழியைத் தவிர்த்து, கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
கொடுங்காடு என்ற இடத்தின் அருகே இருட்டில் வழி தவறி காருடன் ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர்.
கார் முழுவதுமாக நீரில் மூழ்கியதில் முன்பக்கம் அமர்ந்திருந்த இருவரும் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
பின்பக்கக் கதவு திறந்துகொண்டதால், மற்ற மூவரும் நீந்தி கரையேறியுள்ளனர். பல மணி நேரம் போராடி உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீசார் காரை மீட்டனர்.