நாடு முழுவதும் 29 வந்தே பாரத் ரயில்களை ஒரே சமயத்தில் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை முயற்சி நடைபெற்றது.
ஜப்பானின் புல்லட் ரயில்கள் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் நிலையில், வந்தே பாரத் ரயில்களின் சுத்தம் செய்யும் நேரத்தை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
அத்துடன் மற்ற விரைவு ரயில்கள் அடுத்த பயணத்திற்கு புறப்படுவதற்கு அதிக நேரம் இடைவெளி உள்ள நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு குறைவான நேர இடைவெளி மட்டுமே உள்ளதால், அவற்றை விரைவாக சுத்தம் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் எழும்பூரிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு பெட்டிக்கு 4 பணியாளர்கள் வீதம் நண்பகல் 12 மணி முதல் 14 நிமிடங்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.